ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

udhayanidhi

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - பிடிஐ

Published On :4 ஆகஸ்ட் 2026, 10:08 pm IST
5:18 am, 4 ஆகஸ்ட் 2026

தவெக அமைச்சர்கள் கண்டனம்

முதல்வர் விஜய்க்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து தவெக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

5:18 am, 4 ஆகஸ்ட் 2026

உதயநிதி ஸ்டாலின் கைது?

முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

5:18 am, 4 ஆகஸ்ட் 2026

உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு.

5:24 am, 4 ஆகஸ்ட் 2026

இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா? உதயநிதியை விமர்சித்த அண்ணாமலை!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை விமர்சித்து முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

5:24 am, 4 ஆகஸ்ட் 2026

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு

நடிகை த்ரிஷாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

5:29 am, 4 ஆகஸ்ட் 2026

அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளா? ஜோதிமணி கடும் கண்டனம்

அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளா என்று உதயநிதி பேச்சுக்கு ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

5:44 am, 4 ஆகஸ்ட் 2026

முதல்வர் விஜய் குறித்து விமர்சனம்! உதயநிதி கைது!

தஞ்சையில், முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததாகத் தொடரப்பட்ட புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தஞ்சை காவல்துறை கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

5:57 am, 4 ஆகஸ்ட் 2026

காமெடியாக பார்க்கிறேன்

கைது நடவடிக்கையை காமெடியாக பார்ப்பதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6:25 am, 4 ஆகஸ்ட் 2026

உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைதைக் கண்டித்து தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.

7:04 am, 4 ஆகஸ்ட் 2026

திமுக போராட்டம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

7:06 am, 4 ஆகஸ்ட் 2026

அன்புமணி கண்டனம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கும், அவர் மீதான கைது நடவடிக்கைக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

7:48 am, 4 ஆகஸ்ட் 2026

உதயநிதி ஸ்டாலின் கைது: சேலத்தில் திமுகவினர் சாலை மறியல்!

8:00 am, 4 ஆகஸ்ட் 2026

விசாரணை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

8:38 am, 4 ஆகஸ்ட் 2026

மக்களைத் தாக்கும் திமுகவினர்!

பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள் என அமைச்சர் ராஜ்மோகன் பதிவிட்டுள்ளார்.

8:38 am, 4 ஆகஸ்ட் 2026

பெண்கள் பற்றி உதயநிதி பேசியது சரியா? பதிலளிக்காமல் சென்ற மேயர் பிரியா!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு சென்னை மேயர் பிரியா கண்டனம் தெரிவித்த நிலையில், 'பெண்கள் பற்றி உதயநிதி பேசியது சரியா?' என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.

8:49 am, 4 ஆகஸ்ட் 2026

உதயநிதிக்கு மதிய உணவு

விழுப்புரம் காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மதிய உணவை காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

9:03 am, 4 ஆகஸ்ட் 2026

இன்றே விடுவிக்க வேண்டும்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைஉத்தரவிட்டுள்ளது.

1:02 pm, 4 ஆகஸ்ட் 2026

த்ரிஷா என்ன பிரதமரா? - திமுக கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து பேசிய திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி, த்ரிஷா என்ன பிரதமரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

1:02 pm, 4 ஆகஸ்ட் 2026

காவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்

காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஆகஸ்ட் 4) கேள்வி எழுப்பியுள்ளார்.

1:04 pm, 4 ஆகஸ்ட் 2026

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்படும் உதயநிதி!

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தஞ்சை தெற்கு நகர காவல் நிலையத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

1:48 pm, 4 ஆகஸ்ட் 2026

முதலில் மறுப்பு; பிறகு சம்மதம்!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

2:11 pm, 4 ஆகஸ்ட் 2026

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்! விடியோ வைரல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர் விஜய் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

4:24 pm, 4 ஆகஸ்ட் 2026

பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதி

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை என்றும், பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் துளியும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆக. 4) தெரிவித்தார்.

4:38 pm, 4 ஆகஸ்ட் 2026

தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்

தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.