ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி கைதுக்கு தடை கோரிய வழக்கு! விசாரணை ஒத்திவைப்பு!

உதயநிதி கைதுக்கு தடை கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது பற்றி...

Madras High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:29 pm IST

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை காவல்துறையினர் வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை பகல் 12 மணிக்கு மேல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் அதுவரை உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதை தவிர்க்குமாறும் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அறிவுறுத்தல் வழங்கினார்.

ஆனால், சென்னை நீலாங்கரையில் இல்லத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்த காவல்துறையினர், விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, உதயநிதி கைதுக்கு தடை கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கைது தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் வழக்கின் விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி இளந்திரையன் ஒத்திவைத்தார்.

Summary

Case seeking stay on Udhayanidhi's arrest! Hearing adjourned!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.