ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...

உதயநிதி ஸ்டாலின் கைது

உதயநிதி ஸ்டாலின் - from video grab

Published On :4 ஆகஸ்ட் 2026, 2:38 pm IST

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முதல்வர் குறித்தோ எந்த திரைத்துறையினர் குறித்தோ அவதூறு கருத்துகளை தெரிவிக்கவில்லை. பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசவில்லை. அரசியல் காரணங்களுக்காக திருத்தி பிரசாரம் செய்யப்படுகிறது. நாளை சட்டப்பேரவை கூடும் நிலையில், திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், ”உதயநிதி ஸ்டாலினை காவலில் வைக்கும் எண்ணம் இல்லை. தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தப்பட்டு, காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இன்று இரவுக்குள் விசாரணையை முடித்து, இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், காவல்துறையின் விசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்.

Summary

Udhayanidhi must be released today - Chennai High Court!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.