ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விழுப்புரம் காவல் நிலையத்தில் உதயநிதிக்கு மதிய உணவு!

விழுப்புரம் காவல் நிலையத்தில் உதயநிதிக்கு மதிய உணவு வழங்கப்படுவது பற்றி...

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் - x

Published On :4 ஆகஸ்ட் 2026, 2:15 pm IST

விழுப்புரம் காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மதிய உணவை காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இன்று காலை கைது செய்தனர்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை, காவல்துறை வாகனம் மூலம் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்படும் நிலையில், அச்சரப்பாக்கம் அருகே அவருக்கு திமுக நிர்வாகிகள் உணவு கொடுக்க முயற்சித்தனர்.

ஆனால், கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் போது, வெளி உணவு வழங்கக் கூடாது என்று காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு உணவு அளிக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவிப்பதாகவும், இயற்கை உபாதை கழிக்கக் கூட அனுமதிக்கவில்லை என்றும் அவருடன் காவல்துறை வாகனத்தில் செல்லும் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு காவல்துறையினர் மதிய உணவை வழங்கியுள்ளனர்.

Summary

Lunch for Udhayanidhi at the Villupuram police station!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.