ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி ஸ்டாலின் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் என்ன?

உதயநிதி ஸ்டாலின் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் பற்றிய தகவல்..

உதயநிதி ஸ்டாலின் கைது

உதயநிதி ஸ்டாலின் கைது - from video grab

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:13 pm IST

திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலைவந்த காவல்துறையினர், வழக்குகள் குறித்து விளக்கம் கொடுத்து விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தஞ்சாவூரில் காவேரி பிரச்சனை குறித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசிய போது, முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர் மீது பதிவான வழக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

Story image

பிஎன்எஸ் (BNS) பிரிவு 196 – சமூகங்களுக்கிடையே பகைமையை அல்லது வெறுப்பைத் தூண்டும் வகையிலான செயல்கள் அல்லது பேச்சு.

பிஎன்எஸ் (BNS) பிரிவு 192 – கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் தூண்டுதல்.

பிஎன்எஸ் (BNS) பிரிவு 352 – அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமதித்தல்.

பிஎன்எஸ் (BNS) பிரிவு 79 – பெண்ணின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தை, சைகை அல்லது செயல்.

பிஎன்எஸ் (BNS) பிரிவு 296(b) – பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் காணக்கூடிய இடத்தில் ஆபாசமான வார்த்தைகள் அல்லது செயல்கள்.

பிஎன்எஸ் (BNS) பிரிவு 61 – குற்றச் சதி (Criminal Conspiracy).

பிஎன்எஸ் (BNS) பிரிவு 351(2) – கடுமையான குற்ற மிரட்டல் (Criminal Intimidation).

தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 2002 – பிரிவு 4 – பெண்களை துன்புறுத்துதல் தொடர்பான குற்றம்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 – பிரிவு 67 – மின்னணு ஊடகங்களில் ஆபாசமான தகவல், படம் அல்லது விடியோவை வெளியிடுதல் அல்லது பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Summary

What are the cases registered against Udhayanidhi Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.