ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி கைது! காவல் வாகனத்தில் தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்!

கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி காவல் வாகனத்தில் தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார் என்று தகவல்.

Published On :4 ஆகஸ்ட் 2026, 11:29 am IST

தஞ்சை திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் விஜய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக அவர் காவல் வாகனத்திலேயே தஞ்சை அழைத்துச் செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது.

தஞ்சாவூரில் காவேரி பிரச்சனை குறித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்த பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தஞ்சை காவல்நிலையத்தில் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இன்று காலை, உதயநிதியின் வீட்டுக்கு வந்த தஞ்சை காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து தகவல் தெரிவித்து, அவரை கைது செய்தனர்.

உதயநிதி வீட்டின் முன்பு காவல்துறையினர் - திமுக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திமுகவினர் கோஷங்கள் முழங்க உதயநிதியை காவல்துறையினர் கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

முன்பு அவரை சென்னையில் வைத்து விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் காவல் வாகனத்திலேயே தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார் என்று தெரிய வந்துள்ளது.

உதயநிதியை கைது செய்து அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள். வழிநெடுகிலும் திமுகவினர் திரண்டுள்ளனர். இதனால் சென்னையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Summary

Udhayanidhi arrested taken to Thanjavur in a police vehicle

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.