ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு' சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! ஆதவ் vs உதயநிதி

சட்டம் - ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம் குறித்து பேரவையில் ஆதவ் அர்ஜுனா - உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் வாதம்.

It was the DMK that created the Drug-Free Tamil Nadu special wing: Aadhav vs Udhayanidhi

ஆதவ் அர்ஜுனா - உதயநிதி ஸ்டாலின் - TN

Published On :17 ஆகஸ்ட் 2026, 11:33 am IST

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் வாதம் நடந்தது.

போதைப்பொருள் புழக்கம் குறித்து தகவல் கொடுத்த மாணவர்கள் இறந்தது குறித்து உதயநிதி பேச, அதற்கு 'போதைப்பொருள் புழக்கத்துக்கு திமுகதான் காரணம்' என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

இதற்கு பதிலளித்து எ.வ. வேலு பேசுகையில், "கேள்வி நேரத்திலும் சரி, கவன ஈர்ப்பு தீர்மானத்திலும் சரி, குற்றச்சாட்டுகள் எதுவும் சொல்ல கூடாது என்பது விதி. எதிர்கட்சித் தலைவர், தமிழகத்தில் இந்தெந்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது என்று கவனத்திற்கு கொண்டுவருகிறார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்திலும் ஒத்திவைப்பு தீர்மானத்திலும் அரசு விளக்கம்தான் கொடுக்க வேண்டுமே தவிர, பதிலுக்கு குற்றச்சாட்டுகள் சொல்லக் கூடாது" என்று கூறினார்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,

"நான் உள்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைவருமே, தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த கொலைகளைக் கவனத்தில் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், அதற்கு சரியான பதிலை எந்த அமைச்சரும் கொடுக்கவில்லை. உங்கள் ஆட்சியில் இப்படி நடந்தது என்று குறை கூறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் இத்தனை வழக்குகள் என்று அமைச்சர் ஆதவ் கூறினார். அப்படியென்றால் நாங்கள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

உங்கள் ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு' என்று கொண்டுவந்து போதைப்பொருள்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து எங்கள் ஆட்சியில்தான். இதற்காக சிறப்புப் பிரிவை உருவாக்கினோம்.

திமுக அரசில் இதுவரை இல்லாத அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஆணையர் அமல்ராஜ் ஐபிஎஸ்ஸிடம் கேட்டால் தெளிவாகச் சொல்வார்கள். ஏனென்றால் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்புக்கு அவர்தான் தலைமை தாங்கினார்.

அவரைத்தான் இன்று சென்னை மாநகர ஆணையராக இந்த அரசு நியமித்திருக்கிறது" என்றார்.

உடனே ஆதவ், "உங்களுக்கு இதற்கு எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கி நடவடிக்கை எடுத்தீர்கள்?' என்று கேட்டார்.

உதயநிதி "தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கு சிறப்பாகப் பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டள்ளது. அவர்களிடம் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேளுங்கள்" என்றார்.

Summary

It was the DMK that created the Drug-Free Tamil Nadu special wing: Aadhav vs Udhayanidhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.