ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைதைக் கண்டித்து தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் கைது ...

OPS arrest in theni who protest against udhayanidhi arrest

உதயநிதி | ஓபிஎஸ் - ANI | கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 11:47 am IST

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைதைக் கண்டித்து தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது தவெக மகளிரணியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டனர். அவரை கைது செய்ய வந்திருப்பதாகக் கூறிய தஞ்சை காவல்துறையினர் பின்னர் அவரிடம் பேசிய பிறகு கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இதனால் தமிழகம் முழுவதும் உதயநிதி கைதைக் கண்டித்து திமுகவினர் போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், உதயநிதியின் கைதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து காவல்துறையினர் ஓபிஎஸ் மற்றும் அவருடன் இருந்த திமுக நிர்வாகிகளைக் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

OPS arrest in theni who protest against udhayanidhi arrest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.