ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 11:16 am IST

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது தவெக மகளிரணியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரை கைது செய்ய வந்திருப்பதாக குடும்பத்தினரிடம் காவல்துறையினர் பேசி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால் உதயநிதியை கலந்துகொள்ளவிடாமல் செய்யவே தவெகவினர் இவ்வாறு செய்வதாக உதயநிதி தரப்பு வழக்கறிஞர், நீதிபதியிடம் கூறினார்.

மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.

மனு தாக்கல் செய்தால் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் பகல் 12 மணி வரை உதயநிதியைக் கைது செய்யக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

Summary

Udhayanidhi to be arrested, Urgent plea in Madras High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.