ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளா? ஜோதிமணி கடும் கண்டனம்

அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளா என்று உதயநிதி பேச்சுக்கு ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

CM assured secular, corruption-free governance: Congress MP Jothimani after TVK alliance meeting

ஜோதிமணி எம்.பி. - ANI

Published On :4 ஆகஸ்ட் 2026, 10:24 am IST

தஞ்சையில் நேற்று நடைபெற்ற திமுக போராட்டத்தின் போது, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து உதயநிதி கடுமையான விமர்சனம் செய்துப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது.

எல்லாக் காலத்திலும் ஆண்களின் அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை ,இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் உள்ளிட்ட அரசியல் ஆபாசங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.

பொதுவாழ்வில் கண்ணியம், பெண்கள் உள்ளிட்ட சக மனிதர்கள் மீதான மரியாதையைக் கடைபிடிக்க வேண்டியது மிக அடிப்படையான பண்பு. பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுகிற ஒருவர் எப்படி பொதுவெளியில் இவ்வளவு அநாகரிகமாகப் பேசமுடியும்? மிக நிச்சயமாக இப்படியொரு மோசமான பேச்சை எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை. கடுமையான கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் எழுந்திருக்கும் நிலையில், அவரது வீட்டு வாசலில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

Summary

Are women easy targets in politics? Jothimani strongly condemns this

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.