ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதி

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை என உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளது குறித்து...

Udhayanidhi stalin

உதயநிதி ஸ்டாலின் - எக்ஸ்

Published On :4 ஆகஸ்ட் 2026, 9:44 pm IST

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை என்றும், பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் துளியும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆக. 4) தெரிவித்தார்.

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவில்லை என விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியது சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் என்ற அச்சத்தில், தவெக அரசு கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி பேசியதாவது:

''முதல்வர் விஜய்யிடம் மாநில ஒற்றுமையை காட்டுவோம் என்று கூறினேன். யாரும் கேட்கவில்லை. காவிரி நீரை பெற்றுத்தர வக்கில்லாதது தவெக அரசு.

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பிரச்னை குறித்துப் பேசினேன். விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் குறித்துப் பேசினேன்.

நான் பேசாத விஷயத்தை பேசியதாகக் கூறி பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் நான் யாரையும் தவறாகப் பேசவில்லை.

பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் துளியும் இல்லை. பெண்களை தாழ்த்திப் பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனக்கு மனைவி, மகள் இருக்கிறார். குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன்.

திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம். என் பேச்சுக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால் திசை திருப்ப முயற்சி

கைதுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். மக்கள் பணத்தில் 3,000 காவலர்கள் பாதுகாப்பில் அழைத்துவரப்பட்டேன்.

கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை தலைவணங்குகிறேன். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த ஆட்சியில் திமுக எடுத்த முயற்சியால் காவிரிக்கு தண்ணீர் வந்துள்ளது. இந்த முறை தண்ணீர் வரவில்லை. இந்த உண்மையை திரும்பத் திரும்ப பேசுவேன்.

தவெக ஆட்சியை நான் சர்க்கஸ் கூடாரமாகவே பார்க்கிறேன். திமுக பேரவை உறுப்பினர்களைப் பார்த்தால் கைது செய்ய வேண்டும் எனத் தோன்றும். அதிமுக உறுப்பினர்களைப் பார்த்தால் சோஃபா கொடுக்கத் தோன்றும்'' என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Summary

I did not speak with double meanings; I have no intention of demeaning women Udhayanidhi stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.