ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண் ஏன் அடிமையானாள்? புத்தகத்தை உதயநிதிக்கு கொடுக்க வேண்டும்: ஆதவ் அர்ஜுனா

திமுகவின் அவதூறு பேச்சு கருணாநிதி காலத்திலேயே தொடங்கிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து...

 Tamilaga Vettri Kazhagam Aadhav Arjuna

ஆதவ் அர்ஜுனா - படம் / Tamilaga Vettri Kazhagam

Published On :4 ஆகஸ்ட் 2026, 8:46 pm IST

திமுகவின் அவதூறு பேச்சு கருணாநிதி காலத்திலேயே தொடங்கிவிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (ஆக. 4) தெரிவித்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் காலத்தில் பேசியதைப்போல ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் பெண்கள் குறித்து அவதூறாகப் பேச முடியாது எனவும் குறிப்பிட்டார்.

சென்னை பனையூரில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

''முன்னாள் முதல்வரின் பேரன், மகன் என்ற ஆணவம் உதயநிதியிடம் உள்ளது. பெண்களை சமமாக கருதும் சிந்தனை உதயநிதியிடம் இல்லை. பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை உதயநிதிக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு இடத்திலாவது பெண்களை தரக்குறைவாக முதல்வர் ஜோசப் விஜய் பேசியிருப்பாரா? விமர்சித்துப் பேசியிருப்பாரா? ஒருமுறை கூட பெண்களை அவர் தரக்குறைவாக பேசியதில்லை. சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசத்தொடங்கும்போது பார்ட்டி ஃபன்ட் என்றவுடன் திமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

தவெகவுக்கு வெற்றியை ஈட்டித்தந்தது பெண்கள், எனவே அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

ஒரு பெண் அரசியலுக்கு வரக்கூடாதா? நிரூபராக வரக்கூடாதா? கேள்வியை விட்டுவிட்டு அவரின் உடலை சுக்குநூறாக்குவதுதான் திமுக. அவர் உதயநிதி அல்ல, ஆபாச நிதி. இனி அவரை அப்படித்தான் அழைக்க வேண்டும்.

பெண்களை தனது அம்மா, சகோதரி போன்று நினைப்பதால் முதல்வர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். ஜோசப் விஜய் ஆட்சியில் பெண்கள் மீது அவதூறு பேசினால் அமைதியாக இருக்கமாட்டோம். எதிர்காலமே இல்லாதது திமுக. எங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி மாட்டிக்கொண்டனர்.

திமுக அடையாளம், உங்கள் தாத்தாவின் அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு வாருங்கள். சேப்பாக்கம் தொகுதியில் ஒரு சாமானியரை எங்கள் கட்சி நிறுத்தும். நீங்கள் டெபாசிட் இழந்திருப்பீர்கள்.

காவிரி பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். நாங்கள் பதில் கூறுகிறோம்.

உச்சநீதிமன்ற வழக்கில் தோற்றுவிட்டு இப்போது முதல்வர் முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறுகிறது திமுக. வழக்கில் தோற்றபோது ஆட்சியில் இருந்தது திமுக.

கடந்த 10 ஆண்டுகளாக மழை பெய்ததால், தண்ணீர் வரத்து இருந்தது. இந்த ஆண்டு மழை பெய்யாததால் வறட்சி நிலவுகிறது.

கன்னடர்களும் தமிழர்களும் சகோதர சகோதரிகள். விஜய் பெங்களூரு சென்றால் 10 லட்சம் பேர் நிற்பார்கள். அவர் கர்நாடக மக்களுக்கும் சேர்ந்துதான் யோசிக்கிறார். மேக்கேதாட்டு பிரச்னைக்கு காரணம் திமுகதான்.

இரு மாநிலங்களுக்கு இடையே சமூக பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கர்நாடகம் செல்ல நினைத்தார். 2026 தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என டி.கே. சிவகுமார் இங்கு பிரசாரம் மேற்கொண்டார். அவரிடம் மேக்கேதாட்டு குறித்து பேசியிருக்கலாமே? பிரச்னைக்கு யார் காரணம் என இப்போது புரிகிறதா?'' என ஆதவ் அர்ஜுனா பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.