ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி ஸ்டாலின் கைது: சேலத்தில் திமுகவினர் சாலை மறியல்!

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல்..

road blockade

திமுகவினர் சாலை மறியல் - video crop

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:05 pm IST

காவிரி பிரச்னை தொடர்பாக தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி இன்று காலை கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழக முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மத்திய மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசைக் கண்டித்தும் முதல்வரைக் கண்டித்தும் கண்டனக் கோசங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மறியல் போராட்டம் காரணமாக நான்கு புறங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டதால் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை அதிரடியாகக் கைது செய்து அரசுப் பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர் அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து போலீஸார் போக்குவரத்தைச் சீர் செய்தனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.