ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண்கள் பற்றி உதயநிதி பேசியது சரியா? பதிலளிக்காமல் சென்ற மேயர் பிரியா!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு சென்னை மேயர் பிரியா கண்டனம்...

Chennai Mayor Priya condemns the arrest of Opposition Leader Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் | சென்னை மேயர் ஆர். பிரியா - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:24 pm IST

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு சென்னை மேயர் பிரியா கண்டனம் தெரிவித்த நிலையில், 'பெண்கள் பற்றி உதயநிதி பேசியது சரியா?' என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.

நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையான நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று அவர் கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சென்னை மேயர் ஆர். பிரியா இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது கண்டிக்கத்தக்கது. உதயநிதி கைது செய்வதால் இன்று அவரைப் பார்க்க கட்சி நிர்வாகிகள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

கட்சிக்காக உழைத்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அவர்கள் என்ன தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார்களா? இது முற்றிலும் அராஜக அரசியலாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஜனநாயகம் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்று ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில்தான் இருக்கிறார்கள். ஜனநாயகன் படத்திற்கு தியேட்டரில் அழுகிறார்கள்.

ஒருவருக்கு ரத்தம் வரும் அளவுக்கு போலீசார் அடிப்பதுதான் ஜனநாயகமா? காவல்துறையினர் உங்கள் கைகளில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாமா? இதற்கு எல்லாம் அரசு பதில் சொல்ல வேண்டும். சட்டப்படி நாங்கள் இதனை எதிர்கொள்வோம்" என்றார்.

மேலும் 'பெண்கள் பற்றி உதயநிதி பேசியது சரியா? தவறா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதிலளிக்காமல், வேகமாக திரும்பிச் சென்றார்.

Summary

Chennai Mayor R. Priya condemns the arrest of Opposition Leader Udhayanidhi Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.