சோழவரம் அருகே சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த துப்பாக்கி தோட்டாவை கைப்பற்றி சோழவரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வேட்டைக்காரன் பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது துருப்பிடித்த இரும்பு போன்ற ஒரு பொருள் இருந்தது தெரியவந்தது.
இந்து குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், சோழவரம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு அந்த இரும்பு பொருளை ஆய்வு செய்தனா். அப்போது அவை துப்பாக்கி தோட்டா என்பது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து சாலையில் துப்பாக்கி தோட்டா கிடந்தது குறித்து அலமாதி கிராம நிா்வாக அலுவலா் ஜானகிராமன் சோழவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
சோழவரம் போலீஸாா், துப்பாக்கி தோட்டாவை கைப்பற்றி, அவை பழைய துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் தோட்டாவா, துருப்பிடித்த நிலையில் கிடந்ததால் பல ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்து வெளியில் வந்ததா அல்லது ராணுவ வீரா்கள் பயிற்சியின்போது தவறி விழுந்ததா, நரிக்குறவா்கள் வேட்டைக்குப் பயன்படுத்தும் தோட்டாவா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









