திருப்பூரில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சாலையோரத்தில் கிடந்த பையை கைப்பற்றி போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதில் சுமாா் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







