தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!

மொஹாலியில் அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!

News image

மொஹாலியின் பெண் கொலை - file photo

Updated On :6 ஜூன் 2026, 10:46 am IST

சண்டிகரின் மொஹாலி நகரில் அமைந்துள்ள ஒரு அலுவலகத்துக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் கத்தியால் 34 முறை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னும் ஒரு சில நாள்களில், அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பாட்டியாலாவைச் சேர்ந்த டிம்பிள் என்பவர், அலுவலகத்தில் தன்னுடைய இருக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஹர்விந்தர் மன் (34) என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் டிம்பிள் உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட அடையாளங்கள் இருப்பதை உறுதி செய்தனர்.

கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹர்விந்தர் மன், அதேக் கத்தியால் தன்னுடைய கழுத்துப் பகுதியில் 10 - 11 முறை குத்தியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டிம்பிள் குடும்பத்தினர் கூறுகையில், டிம்பிளுக்கு குடும்பத்தினரால் பேசி நிச்சயதார்த்தம் முடிந்து இன்னும் ஒரு சில நாள்களில் திருமணம் நடைபெறவிருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஒட்டுமொத்த கொலைச் சம்பவமும் அலுவலகத்துக்குள் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சியில் டிம்பிளின் பின் பக்கமாக வந்த ஹர்விந்தர், கழுத்தில் கத்தியால் குத்துகிறார். பிறகு அவர் எழுந்து ஓடும்போதும் துரத்திச் சென்று கத்தியால் குத்துவது பதிவாகியிருக்கிறது.

முதற்கட்ட விசாரணையில், இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. கொலைச் சம்பவம் குறித்து டிம்பிள் பெற்றோர், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Summary

Bride stabbed to death 34 times inside office in Mohali!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.