ஆத்தூரில் சாலையில் கேட்பாரற்று கிடந்த இரண்டரை பவுன் சங்கிலியை உரிமையாளரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன் திங்கள்கிழமை கேட்பாரற்று கிடந்த இரண்டரை பவுன் சங்கிலியை அவ்வழியாக சென்றவா் எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளாா். இதுகுறித்து காவல் துறையினா் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டனா்.
இதையடுத்து, ஆத்தூா் நேதாஜிநகரைச் சோ்ந்த கலியன் கவுண்டா் மகன் வரதராஜன் (52) உரிய ஆவணங்களை காவல் ஆய்வாளா் (பொறுப்பு) குலசேகரனிடம் ஒப்படைத்து நகையை பெற்றுக்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









