

முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின்
பக்ரீத் பண்டிகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 21 நாள்களில் அனுமதி வழங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
தவெகவில் வெல்லமண்டி நடராஜன்!
அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் புதன்கிழமை இரவு தவெகவில் இணைந்தார்.
சிறப்பு ரயில்
சென்னை எழும்பூர்-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் மே 29, 30 தேதிகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை புறப்பட்டார் விஜய்
தில்லியில் இருந்து இருநாள் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் சென்னைக்கு புறப்பட்டார்.
சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட அதிமுக எம்பி தனபால் கோரிக்கை வைத்துள்ளார்.
தங்கம், வெள்ளி விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,200 அதிரடியாக குறைந்துள்ளது.
நார்வே செஸ்: மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!
நார்வே செஸ் தொடரின் 3-வது சுற்றில் உலகின் முன்னணி வீரரான மாக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
மு.க. ஸ்டாலினுடன் சேர்ந்து இபிஎஸ் ஆட்சியமைக்க முயன்றதாலேயே அதிமுகவில் பிரச்னை: நிர்மல்குமார்
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திமுகவுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டு, திமுகவுக்கு எதிராக அரசியல் செய்தவர்கள். ஆனால், இப்போது திமுகவுடன் சேர்ந்தே ஆட்சியமைக்க வேண்டிய சூழ்நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டதால், அதனை எதிர்த்து சிலர் வெளிவந்தனர் என்று அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு
வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்ற பேருந்து விபத்து!
பஞ்சாபில் தனியார் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 15 பயணிகள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாஜக தலைவர்கள் நியமனம்!
பாஜகவின் தில்லி மாநிலத் தலைவர் உள்பட நான்கு மாநில தலைவர்களை அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நவீன் இன்று நியமித்துள்ளார்.
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியில் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கரப்பான் பூச்சியைப் பிரதமர் அடிப்பார்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை ’ஹிட்’டை வைத்து பிரதமர் நரேந்திர மோடி அடிப்பார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விடைபெற்றது கத்திரி வெய்யில்!
தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் வெப்பம் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெய்யில் காலம் வியாழக்கிழமை (மே 28) நிறைவடைகிறது.
சித்தராமையா ராஜிநாமா
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
எங்கெல்லாம் இன்று கனமழை?
தமிழ்நாட்டில் மே 28 (இன்று) 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ விவகாரம்! கல்வி அமைச்சரை பிரதமர் நீக்கியிருக்க வேண்டும்: ராகுல்
சிபிஎஸ்இ ஓஎஸ்எம் குளறுபடிகள் விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ராகுல் கேள்வி: சர்ச்சையில் சிக்கியுள்ள கோயெம்ப்ட் நிறுவனத்திடம் ஓஎஸ்எம் ஒப்பந்தம் ஏன் வழங்கப்பட்டது? ஏன் பின்னணிச் சரிபார்ப்புகள் நடத்தப்படவில்லை? கோயெம்ப்ட் நிர்வாகத்துக்கும் மோடி அரசுக்கும் என்ன தொடர்பு?
ஒருவேளை பிரதமர் அக்கறை கொண்டிருந்தால், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை அழித்ததற்காக உங்களை அவர் பணிநீக்கம் செய்திருக்க வேண்டும்.
மாநிலங்களவை பதவியும் வேண்டாம்.. ராஜிநாமா பற்றி சித்தராமையா விளக்கம்!
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகிய சித்தராமையா, “நான் தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன். எனக்கு தேசிய அரசியலில் ஆர்வமில்லை. மாநிலங்களவை பதவி குறித்தும் என்னிடம் கேட்கப்பட்டது. நான் அதை மறுத்துவிட்டேன். நான் கர்நாடக அரசியலிலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சப்தமில்லாத செலவும் உண்மையான பக்தியும்!
கடவுள் எங்கு இருக்கிறார் என்பது பலரின் கேள்வி. வெளிப்புற சடங்குகளை விட, தூய அன்பால் நிரம்பிய இதயத்தில்தான் இறைவன் குடியிருப்பார் என்பதை பூசலார் நாயனார் வரலாறு உணர்த்துகிறது.
சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!
சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சேவையை முதல்வர் சி. ஜோசப் விஜய் நாளை(மே 29) தொடக்கி வைக்கிறார்.
தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க வேண்டும்: ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தினர் நீர்மோர்ப் பந்தல்கள் திறக்க வேண்டும் என பொதுச்செயலர் ஆனந்த் வேண்டுகோள்.
சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்: தர்மேந்திர பிரதான்!
‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதி
அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவுக்குரல்!
“பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது” - இபிஎஸ், அதிமுக பொதுச்செயலாளர்
பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.























