திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!

தமிழகத்தில் உரம் விலை திடீரென உயர்ந்துள்ளது குறித்து...

News image

தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு! - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 8:36 pm IST

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, தமிழகத்தில் உரம் விலை திடீரென உயர்ந்துள்ளது.

யூரியா தயாரிப்புக்கு மிக முக்கியமான மூலப்பொருளான திரவ இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இஃப்கோ உள்பட முன்னணி உர நிறுவனங்கள் தங்களின் சில ஆலைகளில் உற்பத்தியை ஏற்கெனவே குறைத்துள்ளன.

எல்என்ஜி மட்டுமல்லாமல் உரத் தயாரிப்புக்குத் தேவையான அமோனியா, சல்பர் போன்ற இதர மூலப்பொருள்களின் விலையும் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த உற்பத்திச் செலவையும் பன்மடங்கு உயர்த்தும் என அஞ்சப்படுகிறது.

உலகளாவிய உர விநியோகச் சங்கிலியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் உரம் விலை திடீரென உயர்ந்துள்ளது.

அதன்படி, பொட்டாஷ் உரம் ரூ.1,850-லிருந்து ரூ.2,250 ஆகவும், பாக்டம்பாஸ் ரூ.1,750-லிருந்து ரூ.2,150 ஆகவும், அம்மோனியம் சல்பேட் ரூ.1,200-லிருந்து ரூ.1,400 ஆகவும் உயர்ந்துள்ளது.

காம்ப்ளக்ஸ் ரூ. 1,550-லிருந்து ரூ. 2,200 ஆகவும் உயர்ந்துள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் 15% வரை அதிகரித்துள்ளது.

இதனால் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

அரிசி, கோதுமை, சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதால், உர விலை உயர்ந்தால் அது நேரடியாக மளிகைப் பொருள்களின் விலையையும் உயர்த்தும் என்று அஞ்சப்படுகிறது.

Summary

Due to the prevailing war tensions in the Middle East, fertilizer prices in Tamil Nadu have risen suddenly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.