பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபி அவர்களின் உன்னதமான இறைபக்தியையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்திற்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடல், மதுரை தமுக்கம் திடல், திருச்சி தென்னூர் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மசூதிகள் உள்பட இஸ்லாமியர்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Summary
Bakrid Festival: Muslims in Tamil Nadu Offer Special Prayers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











