தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க 21 நாள்களில் அனுமதி: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட விடியோ பற்றி...

News image

அமைச்சர் கீர்த்தனா - X

Updated On :28 மே 2026, 9:43 am IST

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 21 நாள்களில் அனுமதி வழங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புதிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அவர் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அதில், “உண்மையில், நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை. கோப்புகள், ஒப்புதல்கள், தாமதங்கள், காத்திருப்பு போன்றவற்றை சரிசெய்ய முதல்வர் விஜய் என்னை நியமித்துள்ளார். நமது அரசு அதிவேக செயல்பாட்டை முன்னெடுக்க கட்டமைக்கப்பட்டு வருகின்றது என நான் உறுதியளிக்கிறேன்.

21 நாள்களில் நிறுவனங்களுக்கு அனுமதி, ஒற்றைச் சாளர ஒப்புதல், அமைச்சர் மற்றும் முதல்வரிடம் நேரடியாகப் பிரச்னைகளைக் கொண்டு செல்லும் முறை என எங்கள் வாக்குறுதிகளை அளிக்கிறோம்.

மாநிலம் முழுவதும் விரைவுத் தொழில் மண்டலம் அமைக்கப்படும். உலகம் எதிர்காலத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாம் அதனைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோம்.

செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நகரம், ட்ரோன் வழித்தடம், மின்சார வாகன உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் என வளர்ச்சி என்பது ஒன்று, இரண்டு மாவட்டங்களுக்காக மட்டுமன்றி மாநிலம் முழுவதும் பரவிய வளர்ச்சியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே முதல்வர் விஜய்யின் நோக்கம். எனவே, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள்” எனப் பேசியுள்ளார்.

Summary

Approval to Start New Businesses in Tamil Nadu Within 21 Days: Minister Keerthana Announces

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.