திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை!

எம்எல்ஏக்கள் ராஜிநாமா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

ராஜிநாமா செய்த எம்.எல்.ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம். உடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா. - X

Updated On :28 மே 2026, 10:33 am IST

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட அதிமுக எம்பி தனபால் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகவும், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ஆளுங்கட்சியான திமுக எதிர்க்கட்சியான நிலையில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி - சிவி சண்முகம் அணி என இரண்டாக உடைந்தது.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தங்களின் பதவியை ராஜிநாமா செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, 4 பேரும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதிமுக எம்பி தனபால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

“தவெகவிற்கு தனி பெரும்பான்மை இல்லாத சூழலில், அதிமுகவை உடைக்க நினைத்தும் முடியாத நிலையில், பதவியேற்ற உடனே ராஜிநாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும்.

மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, அதிமுகவின் இரு அணிகளும் இணைவதாக எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை அறிவித்தார். பிரிந்த எம்.எல்.ஏ.க்களின் சி.வி. சண்முகம் மட்டும் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

MLAs Resign - AIADMK MP Demands CBI and ED Probe!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.