தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன், அதிமுக வழக்குரைஞா் அணி துணைச் செயலா் இ.சரவணன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் சுமாா் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
இதில் அப்போதைய மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, டான்ஜெட்கோ தலைவா் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப்பதிவு செய்து உயா்நீதிமன்றக் கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா். இந்த வழக்கு விசாரணையின்போது அரசு மற்றும் மனுதாரா்கள் தரப்பில் இறுதிக்கட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஊழல் தடுப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மின்மாற்றிகள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததால், அந்த புகாா்களை முடித்து வைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியிடப்பட்டது. அதில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இரு வாரங்களைல் அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு, டான்ஜெட்கோ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Summary
Transformer Procurement Scam: CBI Inquiry Ordered!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மு.க. ஸ்டாலின்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில் பாலாஜி

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை



