ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்றைய ஜூலை 31 செய்திகள் - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

joseph vijay

முதல்வர் சி. ஜோசப் விஜய் - டிஐபிஆர்

Published On :31 ஜூலை 2026, 10:11 pm IST
5:29 am, 31 ஜூலை 2026

ஜனநாயக விரோதம்!

திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

5:29 am, 31 ஜூலை 2026

மின்சாரத்தில் தடங்கல்

தமிழகத்தில் மின்கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்திருப்பதாக தவெக அரசு மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

5:29 am, 31 ஜூலை 2026

'திருடி'ப் பதுக்கிய எலி!

கர்நாடகத்தில் நகைக் கடையில் தங்க, வைர நகைகளை எலி திருடிய சம்பவம் சிசிடிவி காட்சிகளால் வெளிவந்துள்ளது.

5:29 am, 31 ஜூலை 2026

தோல்வியடைந்த அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கையை ஆதரிப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

5:29 am, 31 ஜூலை 2026

10 பேர் மாயம்

வட பாகிஸ்தானில் உள்ள உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான 'பிராட் பீக்' சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற சர்வதேச மலையேற்ற வீரர்கள் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

5:29 am, 31 ஜூலை 2026

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடகம்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதிலும், தமிழகத்துக்கான தண்ணீரை கர்நாடகம் இன்று திறந்து விடவில்லை.

5:29 am, 31 ஜூலை 2026

தங்கம் விலை உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 106,040-க்கு விற்பனையாகிறது.

5:29 am, 31 ஜூலை 2026

ராகுல் எச்சரிக்கை

ஜென் ஸீ தலைமுறையினரை மிரட்டி அமைதிப்படுத்த முடியாது என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5:29 am, 31 ஜூலை 2026

காங்கிரஸ் கேள்வி

பிரதமர் நிவாரண நிதி குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

5:29 am, 31 ஜூலை 2026

இஸ்ரேல் - காஸா போர்

இஸ்ரேல் - காஸா போருக்கு மத்தியில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

5:29 am, 31 ஜூலை 2026

ராகுல் நாளை சென்னை வருகை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார்.

5:32 am, 31 ஜூலை 2026

தவறான வாட்ஸ் ஆப் தகவலைப் பரப்பும் மு.க. ஸ்டாலின்: அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகத்தில் பொதுமக்களில் பலரும் மின் கட்டணம் தொடர்பாக பாதிக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில், வாட்ஸ் ஆப்பில் வந்த ஏதோவொரு தவறான தகவலை அவர் பரப்புவதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

6:06 am, 31 ஜூலை 2026

ராகுல் நூதன போராட்டம்!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டுக்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடகம் அரங்கேற்றம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6:06 am, 31 ஜூலை 2026

மக்களவை இன்றும் முடங்கியது!

மக்களவையில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால், அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டன.

6:52 am, 31 ஜூலை 2026

செந்தில் பாலாஜி தலைமறைவா?

குதிரை பேர வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து இரண்டாவது நாளாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட ஆஜராகவில்லை.

6:53 am, 31 ஜூலை 2026

நீதிபதி விலகல்!

டாஸ்மாக் முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா விலகுவதாக அறிவித்துள்ளார்.

8:56 am, 31 ஜூலை 2026

டி.கே. சிவகுமார் அறிவிப்பு

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மேல்முறையீடு செய்யப் போவதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

8:57 am, 31 ஜூலை 2026

செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்

டாஸ்மாக் முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். அவரை கைது செய்யவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

9:14 am, 31 ஜூலை 2026

முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்!

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தற்போதைய சூழலில் கர்நாடகத்துக்கு வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.

9:58 am, 31 ஜூலை 2026

எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!

இந்திய பருவமழைக் காலம், இன்று நிறைவடையப்போகும் ஜூலை மாதத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.

9:58 am, 31 ஜூலை 2026

என்ன, மஞ்சள் தூளில் ஈயமா? எப்படி சேர்கிறது? என்ன பாதிப்புகள் ஏற்படும்?

நாம் உணவுக்காகப் பயன்படுத்தும் மஞ்சளில் ஈயம் (lead) கலந்திருப்பது குறித்தும், அது அறுவடைக்குப் பிறகான நடவடிக்கைகளின்போது சேர்வதாகவும், அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்தும் புதிய ஆய்வு அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

12:38 pm, 31 ஜூலை 2026

5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

1:07 pm, 31 ஜூலை 2026

விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவக்குமார் சொன்ன ஒற்றைச் சொல்!

கர்நாடகம் செல்லவிருந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பயணம், ஏற்கனவே பேசுபொருளாகியிருந்த நிலையில், விஜய் கர்நாடகம் வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

1:08 pm, 31 ஜூலை 2026

வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி, சட்டையில் வரும் முதல்வர் விஜய்! காரணம் என்ன?

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றபோது, யாரும் எதிர்பாராத வகையில் கோட் சூட்டில் வந்து அசத்தினார். ஆனால், அதற்கு நேர்மாறாக, தற்போது சில வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி, சட்டையில் தலைமைச் செயலகம் வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

1:44 pm, 31 ஜூலை 2026

குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

2:44 pm, 31 ஜூலை 2026

மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

4:37 pm, 31 ஜூலை 2026

காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதா

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஜூடோ பிரிவில் இந்தியாவின் அஸ்மிதா டே தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

4:38 pm, 31 ஜூலை 2026

காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

காமன்வெல்த் போட்டியில் ஜூடோ விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.