ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல் - காஸா போருக்கு மத்தியில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைக்கவிருப்பது குறித்து...

US officials say Hamas agrees to disarm under Gaza roadmap

அமெரிக்க அதிபர் டிரம்ப் - ANI

Published On :31 ஜூலை 2026, 10:37 am IST

இஸ்ரேல் - காஸா போருக்கு மத்தியில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

2023 அக்டோபர் மாதத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் போரில் இதுவரை 73,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு உலக நாடுகளில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும்கூட, காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தை காஸா அமைதி வாரியம் மேற்கொள்ளவிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைப்பதால், காஸாவில் புதிய பாலஸ்தீன அரசு உருவாவதற்கான முக்கியமான முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய காஸா நிர்வாகக் குழுவிடம் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, காஸாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறும் என்றும், சர்வதேச படையும் புதிய பாலஸ்தீனத்தின் காவல்துறையும் காஸா மக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இருப்பினும், காஸாவில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Summary

Hamas says it has agreed to disarm in Gaza after US President Trump announces Board of Peace plan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.