ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காஸாவின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 6 காவல் அதிகாரிகள் உள்பட 12 பேர் பலி!

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டது குறித்து...

palestinians killed in gaza

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட தாயின் உடல் அருகில் படுகாயங்களுடன் அமர்ந்திருக்கும் பாலஸ்தீன சிறுவன்... - கோப்புப் படம் | AP

Published On :15 ஜூலை 2026, 9:18 pm IST

காஸா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில் கடந்த 2 நாளிகளில் மட்டும் 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவின் மத்திய பகுதியில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனையின் மீது இன்று (ஜூலை 15) இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வடக்கு காஸாவில் பாலஸ்தீனர்கள் அதிகளவில் தஞ்சமடைந்துள்ள ஜபாலியா அகதிகள் முகாமின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், ஒரு பெண் மற்றும் 6 காவல் துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

மேலும், கான் யூனிஸ் பகுதியிலுள்ள முகாமின் மீதான இஸ்ரேலிய படைகளின் குண்டுவீச்சில் அங்கு வசித்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ரஃபா அருகிலுள்ள முவாஸி பகுதியில் ஒரு குழந்தையை இஸ்ரேலிய படைகள் சுட்டுக்கொன்றதாகவும் காஸா நிர்வாகத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்தவொரு காரணங்களையும் தெரிவிக்கவில்லை. ஆனால், கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரிகளில் 4 பேர் ஹமாஸ் கிளர்ச்சிப்படையைச் சேர்ந்தவர்கள் எனக் குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், அதற்கான முழுமையான ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல்களில் மட்டும் 1,123 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போரில் மட்டும் 73,264 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

more than 12 people have been killed in attacks by Israeli forces on Gaza in the last two days alone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.