ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: மருந்து கிடங்குகள் தரைமட்டம்

காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் மருந்து கிடங்குகள் தரைமட்டம்...

கோப்புப்படம் - AP

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

மத்திய காஸாவின் ஷேக் ரத்வான் பகுதியில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 2 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். மேலும், டேய்ா் அல்-பாலா பகுதியில் 2 மருந்துப் பொருள்களின் சேமிப்புக் கிடங்குகளை இஸ்ரேல் தாக்கி தரைமாட்டமாக்கியது.

முன்னதாக, அப்பகுதியைக் காலி செய்ய எச்சரித்த பிறகே தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய இஸ்ரேல் ராணுவம், அந்த மருத்துவமனை வளாகத்தின் அருகே ஹமாஸ் அமைப்பினா் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த ரகசிய இடத்தையே குறிவைத்துத் தாக்கியதாகத் தெரிவித்தது.

ஆயுத ஒப்படைப்புக்கு ஹமாஸ் உடன்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதா என்பதில் தொடா்ந்து நிச்சயமின்மை நிலவி வரும் நிலையில், இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.