ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 2 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Kabini dam

கபினி அணை - கோப்புப்படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 10:25 am IST
3:18 pm, 2 ஆகஸ்ட் 2026

என் குடும்பத்தினர் எனக்குக் கொடுத்த உற்சாகம்: ரவி மோகன் நெகிழ்ச்சி!

நடிகர் ரவி மோகன், தான் இயக்கிய ஆன் ஆர்டினரி மேன் படத்தின் காட்சிகளைப் பார்த்து தனது குடும்பத்தினர் உற்சாகமளித்தது பற்றி பதிவிட்டுள்ளார்.

1:57 pm, 2 ஆகஸ்ட் 2026

பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு!

பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி...

12:57 pm, 2 ஆகஸ்ட் 2026

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கர்நாடகத்தில் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் காங்கிரஸ், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

12:42 pm, 2 ஆகஸ்ட் 2026

கனமழை: கண்ணூர், பத்தனம்திட்டா மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கண்ணூர், பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நாளை(திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

11:16 am, 2 ஆகஸ்ட் 2026

மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்

காவிரி விவகாரத்தில் மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரவித்துள்ளார்.

10:52 am, 2 ஆகஸ்ட் 2026

ஜென் ஸீ எப்போதும் பாஜக பக்கம்தான்: பியூஷ் கோயல்

இளைஞர்களிடையே பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பதால் ராகுல் காந்தி அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

10:22 am, 2 ஆகஸ்ட் 2026

பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியாகினர்.

9:45 am, 2 ஆகஸ்ட் 2026

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

9:03 am, 2 ஆகஸ்ட் 2026

ஆடிப்பெருக்கு விழா: பூக்களின் விலை கடும் உயர்வு! மல்லிகைப்பூ, கனகாம்பரம் கிலோ ரூ.1,000!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, தஞ்சையில் பூக்களின் விலை அதிகரித்து, விற்பனை செய்யப்படுகிறது.

7:51 am, 2 ஆகஸ்ட் 2026

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

7:28 am, 2 ஆகஸ்ட் 2026

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால், தற்போது வரும் நீரும் கிடைக்காது: அன்புமணி

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தற்போது வரும் நீரும் தமிழகத்துக்குக் கிடைக்காது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.

6:20 am, 2 ஆகஸ்ட் 2026

திமுக சொல்வதைத்தான் டி.கே. சிவகுமார் செய்கிறார்: அமைச்சர் நிர்மல் குமார்

திமுக சொல்வதை டி.கே. சிவகுமார் செய்வதாக தமிழக மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் ஞாயிற்றுக்கிழமை (ஆக்ஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.

5:29 am, 2 ஆகஸ்ட் 2026

அங்குஷ் பங்கால் அசத்தல்.. குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7-ஆவது தங்கம்!

கிளாஸ்கோ காமன்வெல்த்தில் அங்குஷ் பங்காலின் அசத்தலான ஆட்டத்தால் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

5:29 am, 2 ஆகஸ்ட் 2026

சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு... குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க, சுற்றுலாப் பயணிகள் இன்று(ஆக. 2) அனுமதிக்கப்பட்டனர்.

5:29 am, 2 ஆகஸ்ட் 2026

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியர்கள்!

கிளாஸ்கோ காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியர்கள் 10 பேர் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்கள். அதில், 7 பேர் தங்கமும் 3 பேர் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

5:29 am, 2 ஆகஸ்ட் 2026

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்திய ஹார்திக் பாண்டியா!

இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று முடிக்காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார்.

5:29 am, 2 ஆகஸ்ட் 2026

கொல்லிமலை மலைப்பாதையில் 2 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

வல்வில் ஓரி விழாவையொட்டி, கொல்லிமலையில் 2 நாள்களுக்கு ஒருவழிப் போக்குவரத்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

5:29 am, 2 ஆகஸ்ட் 2026

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.

5:29 am, 2 ஆகஸ்ட் 2026

குல்வீர் சிங் மீண்டும் அசத்தல்... காமன்வெல்த் 5,000 மீ. ஓட்டத்தில் இந்தியாவுக்கு முதல் வெண்கலம்!

காமன்வெல்த் 5000 மீட்டர் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குல்வீர் சிங்.

5:29 am, 2 ஆகஸ்ட் 2026

2 நாள்களில் அணை நிரம்பியது எப்படி? - பெ. சண்முகம் கேள்வி!

கபினி அணை 2 நாள்களில் நிரம்பியது எப்படி? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

5:29 am, 2 ஆகஸ்ட் 2026

காதர் மொகிதீனின் மகன் மறைவு; முதல்வர் விஜய் இரங்கல்

ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மூத்த மகன் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மானின் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.

5:29 am, 2 ஆகஸ்ட் 2026

குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் தொடங்கியது!

தழிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்று(ஆக. 2) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விரல் ரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பு சிறப்பு முகாமில் குடும்ப அட்டைதாரா்கள் பங்கேற்று பதிவுகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5:24 am, 2 ஆகஸ்ட் 2026

முழுக் கொள்ளளவை எட்டும் கபினி அணை! தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.