ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியர்கள்!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் வரலாறு படைத்த 10 இந்தியர்கள் குறித்து...

Boxing gold medalists

குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்றவர்கள். - படம்: எக்ஸ் / பிஎஃப்ஐ அஃபிசியல்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 10:53 am IST

கிளாஸ்கோ காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியர்கள் 10 பேர் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்கள். அதில், 7 பேர் தங்கமும் 3 பேர் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

இந்தியா சார்பில் முதல்முறையாக 7 தங்கப் பதக்கங்கள் வென்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மட்டுமே 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.

இதுவரை மொத்தமாக இந்திய அணி 39 பதக்கங்களை வென்றுள்ளது. அதில், 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். பதக்க வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவின் சார்பாக மொத்தமாக 14 பேர் (ஆடவர் 7, மகளிர் 7) குத்துச்சண்டையில் பங்கேற்றார்கள். இதில் 10 பேர் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமைச் சேர்த்துள்ளார்கள். அதில் 6 பெண்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

தங்கம் வென்றவர்கள் (7): அங்குஷ் பங்கால் (80 கிலோ), சச்சின் சிவாக் (60 கிலோ), ப்ரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), சாக்‌ஷி சௌதரி (51 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), அருந்ததி சௌதரி (70 கிலோ).

வெள்ளி வென்றவர்கள் (3): லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), ஜதுமணி சிங் (55 கிலோ) மற்றும் நரேந்தர் பெர்வால் (90+ கிலோ).

முன்னதாக, 2022ல் இந்தியா குத்துச் சண்டையில் 7 பதக்கங்கள் வென்றிருந்தது. அதில் 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் வென்றிருந்தார்கள். இந்தமுறை மொத்தமாக 7 தங்கம் வென்று பதக்கப் பட்டியலிலும் முன்னேறியுள்ளது.

Summary

CWG 2026: Indian boxers script history with record seven boxing gold medals, 3 silver medals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.