ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காதர் மொகிதீனின் மகன் மறைவு; முதல்வர் விஜய் இரங்கல்

ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மூத்த மகன் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளது பற்றி...

Passing of Khader Mohideen's son; CM Vijay offers condolences.

காதர் மொகிதீனின் மகன் மறைவு; முதல்வர் விஜய் இரங்கல் - கோப்புப் படம், எக்ஸ்

Published On :2 ஆகஸ்ட் 2026, 9:09 am IST

ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மூத்த மகன் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மானின் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் நேற்று (ஆகஸ்ட் 1) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

கலீலூர் ரஹ்மானின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay expressed his condolences on Sunday (August 2) over the passing of K.M.K. Khalilur Rahman, the eldest son of IUML leader Kader Mohideen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.