ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வைத்த முக்கிய வேண்டுகோள்......

Population Census: Udhayanidhi Stalin urges the people of Tamil Nadu to participate

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

Published On :31 ஜூலை 2026, 7:40 pm IST

மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வரும் 2027 -ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை ஆக.1 முதல் ஆக. 30 வரை தமிழகத்தில் நடத்தவுள்ளது.

அதற்கு முன்னதாக, பொதுமக்களே சுயமாக தங்கள் விவரங்களை இணையம் மூலம் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுய கணக்கெடுப்பு வசதியை முறையாக பயன்படுத்தாத குடும்பங்கள், ஆக. 1 முதல் ஆக. 30 வரை நடைபெறும் வழக்கமான கணக்கெடுப்பில் பங்கேற்று விவரங்களை அளிக்கலாம்.

Summary

Leader of the Opposition Udhayanidhi Stalin has requested that all people participate in the population census.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.