ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மீறல்: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடகம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மீறி, தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறக்காதது குறித்து...

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடகம் - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 1:08 pm IST

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதிலும், தமிழகத்துக்கான தண்ணீரை கர்நாடகம் இன்று திறந்து விடவில்லை.

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.

இருப்பினும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தாமல், தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க மறுத்தது.

ஆனால், கர்நாடகத்தில் போதிய அளவில் தண்ணீர் இல்லை என கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பு தெரிவித்தது.

இதனையடுத்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவின்படி, தமிழகத்துக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமையில் (ஜூலை 30) உத்தரவிட்டது.

ஆனால், இன்றும் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை.

கர்நாடகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்வரத்து வியாழக்கிழமையில் (ஜூலை 30) 5,202 கன அடியாக இருந்த நிலையில், இன்று (ஜூலை 31) 7,058 கன அடியாக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை என தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது.

Summary

Karnataka refuses to release Cauvery water to Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.