ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நகைக் கடையில் ரூ. 10 லட்சம் தங்க, வைர நகைகளைத் 'திருடி'ப் பதுக்கிய எலி!

கர்நாடகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகைகளை எலி திருடியது குறித்து...

Rat Steals Gold Jewellery from Karnataka Shop

நகைகளைத் திருடும் எலி - விடியோ க்ளிப்

Published On :31 ஜூலை 2026, 9:04 am IST

கர்நாடகத்தில் நகைக் கடையில் தங்க, வைர நகைகளை எலி திருடிய சம்பவம் சிசிடிவி காட்சிகளால் வெளிவந்துள்ளது.

கர்நாடகத்தின் துமகுரு மாவட்டத்தில் நகைக் கடை ஒன்றில் கடையின் ஊழியர்கள், புதன்கிழமை காலையில் வழக்கம்போல நகைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், கடையில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைர மோதிரங்களும் தங்கச் சங்கிலிகளும் காணாமல் போயிருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடையின் இரும்புக் கதவுகள் உடைக்கப்பட்டோ கடையின் சுவரில் துளைகள் ஏதும் போடப்பட்டோ நகைகள் கொள்ளையடித்ததற்கான அடையாளம் ஏதுமில்லாததால், எப்படி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என ஊழியர்கள் குழப்பமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிய கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில்தான் அவர்களுக்குப் பேரதிர்ச்சி.

நகைக் கடைக்குள் சுற்றித் திரிந்த ஒரு எலிதான், கடையில் இருந்த தங்க, வைர நகைகளைத் திருடிச் (எடுத்து) சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. கடைக்குள் திருடர்கள் யாரும் நுழைந்து நகைகளைத் திருடிச் செல்லவில்லை என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, எலி சென்ற வழியைப் பின் தொடர்ந்து பார்த்ததில் அதன் வளை இருக்குமிடம் தெரிய வந்தது. அந்த எலியின் வளையில்தான் காணாமல்போன நகைகள் இருந்ததைக் கண்டு நகைக் கடை ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

எலி திருடிச் சென்ற நகைகளை சுமார் 13 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் கண்டுபிடித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. நகைகளை எலி திருடிச் செல்லும் விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Summary

Rat steals jewellery worth Rs 10 lakh from Karnataka store

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.