ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை...

  Congress Rahul gandhi

செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி (கோப்புப்படம்) - PTI

Published On :31 ஜூலை 2026, 10:28 am IST

ஜென் ஸீ தலைமுறையினரை மிரட்டி அமைதிப்படுத்த முடியாது என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தில்லியில் ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்களான மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகைக்குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே, போராட்டத்தில் காவல்துறையினர் எனக் கூறிக் கொண்டு, சீருடை அணியாமலும், பெயர் பட்டை இல்லாமலும் சிலர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பெல்லட் குண்டுகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக மக்களவையில் கடந்த புதன்கிழமை பேசிய ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனிடையே, போராட்டத்தின் போது மாணவர்களுக்கு எதிராக மத்திய அரசால் பதியப்பட்ட வழக்குகள் இன்னும் திரும்பப் பெறப்படாமல் உள்ளன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருப்பதாவது:

“பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அவர்களே, ஜென் ஸீ தலைமுறையினரை மிரட்டி அமைதிப்படுத்த முடியாது.

முதலில் நீங்கள் அவர்களின் எலும்புகளை உடைத்தீர்கள். இப்போது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்குகிறீர்கள்.

நீங்கள் இந்தியாவின் கடந்த காலம். இந்தியாவின் எதிர்காலத்தை நீங்கள் கையாளும் விதத்தில் கவனமாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Gen Z cannot be intimidated; handle them with care! Rahul warns Modi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.