ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்

பாஜக திணிக்க முயலும் உத்தரவுகளை உடைக்க காங்கிரஸ் கட்சி முயலும் என ராகுல் காந்தி பேசியது குறித்து...

Rahul Gandhi

ராகுல் காந்தி - எக்ஸ்

Published On :13 ஆகஸ்ட் 2026, 7:10 pm IST

தங்களுக்கும் தங்களைச் சாந்த ஒருசிலருக்கும் சாதகமான வகையிலான உத்தரவுகளை பிறப்பிப்பது மட்டும்தான் பிரதமர் நரேந்திர மோடியின் வேலை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (ஆக. 13) விமர்சித்தார்.

தனது அரசியல் கொள்கையாகவே பாஜக இதனைக் கொண்டுள்ளதாகவும், பாஜக திணிக்க முயலும் உத்தரவுகளை உடைக்க காங்கிரஸ் கட்சி முயலும் எனவும் குறிப்பிட்டார்.

தில்லியில் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் ராகுல் காந்தி பேசியதாவது:

''ஜந்தர் மந்தரில் என்ன நடக்கிறது என்றால், மாணவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் வேதனையில் இருக்கிறார்கள், அதை வெளிப்படுத்த விரும்புகிறார்கள்; ஆனால் அரசாங்கமோ கூடாது என்கிறது.

நாங்கள் ஜந்தர் மந்தரில் ஒழுங்கை நிலைநாட்டப் போகிறோம்; நீங்கள் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது.

இன்று ஒரு பெண் என்னிடம் வந்துபேசினார். அவரின் மகள் 6 ஆண்டுகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். தனது மகளுக்காக அழுகிறார். அவர் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால், அரசு அமைப்போ அவரிடம் மன்னிப்பு கோருகிறது. உங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தக் கூடாது என மன்னிப்பு கோருகிறது.

அதனால், அவர்களின் வேலை மற்றும் அவர்களின் கொள்கை என்பது தங்களுக்கும் தங்களைச் சார்ந்த ஒருசிலருக்கும் சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பது மட்டுமே. நம்முடைய வேலை அந்த உத்தரவுகளை உடைக்க முயற்சிப்பதே.

நம்முடைய தத்துவத்தையோ வரலாற்றையோ பற்றி துளியும் அறிவில்லாத, வெறும் கோமாளிகளாகவும் வேடிக்கை மனிதர்களாகவுமே உள்ள ஒரு கூட்டத்துடன்தான் நீங்கள் உண்மையில் மோதிக்கொண்டிருக்கிறீர்கள்'' என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

Summary

Rahul Gandhi hits out at Modi government says their job is to impose order on India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.