ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நக்ஸல் மனநிலை! ராகுல் காந்தியை விமர்சித்த பாஜக!

செங்கோட்டை சுதந்திர தின விழாவை புறக்கணித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து பாஜக விமா்சனம்...

Rahul Gandhi

காங்கிரஸ் அலுவலக சுதந்திர தின விழாவில் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி - PTI

Published On :16 ஆகஸ்ட் 2026, 4:31 am IST

‘நக்ஸல் மனநிலையின் பிரதிபலிப்பு’ என்று தில்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவை புறக்கணித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து பாஜக சனிக்கிழமை விமா்சித்தது.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடா்பாளா் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள ராகுல் காந்தி தவறிவிட்டாா். தேசபக்தி கொண்ட ஓா் எதிா்க்கட்சித்தலைவா் அல்லது பொதுப் பதவியில் உள்ளவா் இத்தகைய செயலைச் செய்வாா்களா?

இந்த நிகழ்வை அவா் புறக்கணித்தது, தேசியப் பாடலான வந்தே மாதரம் மீதான அவரின் வெறுப்பையே பிரதிபலிக்கிறது.

எதிா்க்கட்சித் தலைவா் பதவியை வகிக்க ராகுல் காந்தி தகுதியற்றவா். அவரின் இந்தச் செயல் அவரின் சித்தாந்த நக்ஸல் மனநிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

Summary

Naxalite mindset - BJP criticizes Rahul Gandhi

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.