ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராகுல் காந்தியின் ஒரே திட்டம் அராஜகம்தான்: பாஜக

ராகுல் காந்தியின் ஒரே திட்டம் அராஜகம்தான் என்று பாஜக தெரிவித்துள்ளது பற்றி...

Maharashtra Chief Minister Devendra Fadnavis

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் - கோப்புப் படம்

Published On :29 ஜூலை 2026, 9:58 pm IST

ராகுல் காந்தியின் ஒரே திட்டம் அராஜகம்தான் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை (ஜூலை 29) தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுத் தேர்வுகள் முறைகேடு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஆகையால், தொடர்ந்து பேச பாஜக அவரை அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, “மக்களவையில் பேசத் தடுத்த கருத்துகள் அனைத்தையும் செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்” என்று கூறியிருந்தார்.

அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “மாணவர்கள் மீதான காவல் துறையின் தாக்குதலுக்கு அமித் ஷாவே காரணம். நான் மன்னிப்பு கேட்டால் அவையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒருபோதும் பாஜக, ஆர்எஸ்எஸ் அல்லது அவற்றுடன் தொடர்புடைய எவரிடமும் ஒருபோதும் மன்னிப்பு கேட்டு நிற்கமாட்டேன்” என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து தேவேந்திர ஃபட்னவீஸ் பேசுகையில், “ராகுல் காந்தி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ராகுல் காந்தி யார் என்பது இந்திய மக்களுக்குத் தெரியும். மோடி அரசு எதற்காக நிற்கிறது என்பதும், பிரகலாத் ஜோஷி யார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ராகுல் காந்தியின் ஒரே ஒரு அராஜகம்தான். அதை நோக்கியே அவர் செயல்படுகிறார். நாட்டின் நலனுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவருடைய ஒரே நோக்கம் அராஜகத்தை ஊக்குவிப்பதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Maharashtra Chief Minister Devendra Fadnavis stated on Wednesday (July 29) that Rahul Gandhi's only agenda is anarchy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.