ஜனநாயகன் படம் இணையதளத்தில் கசிந்த வழக்கில் 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு ரகசியமாகத் திருமணம் நடந்துவிட்டதாக வெளியான செய்திகளை நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் மறுத்துள்ளார்.
சனிக்கிழமை: நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல்வர் ஜோசப் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்குத் தொகுதியை அவர் ராஜிநாமா செய்த நிலையில், அங்கு திரிஷா போட்டியிட்டால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.
சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள பழமையான செயின்ட் மேரிஸ் தேவாலயத்தையும் முதல்வர் விஜய் பார்வையிட்டார். இந்த தகவல் அறிந்து, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் முதல்வரைக் காண குவிந்தனர்.
நாட்டில் அமைப்பு சாரா மக்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் அடல் மாத ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மாத ஓய்வூதியத் தொகை உயர்த்தப்படுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) இயக்குநர் அபிஷேக் சிங் கூறிய கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு விவகாரத்தில் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினரும், மநீம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் பொதுச் செயலர், எங்களைப் பற்றி தவறாக எழுதி பெரும் குழப்பத்தை சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று அதிமுகவில் உருவான மற்றொரு அணியைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கத்திரி வெய்யில் கொளுத்திவரும் நிலையில், இந்த நிலை அடுத்து வரும் 2 நாள்களுக்கு நீடிக்கும் எனறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திமுக தோழர்கள் யாரையும் இந்த நேரத்தில கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் உங்களின் 'சமூக நீதியை' நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தவெக அமைச்சரவையில், விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றிருப்பதை மறைமுகமாக விமர்சித்துள்ளார் ஆ. ராசா.
மகாராஷ்டிர மாநிலம், சந்திரபூரில் பீடி இலை என்று அழைக்கப்படும் தெண்டு இலைகளைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, புலி தாக்கியதில் நான்கு பெண்கள் பலியானதாக வனத்துறை அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை (மே 22) காலை தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்
கேரள சட்டப்பேரவைத் தலைவருக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கு விற்பனையாகிறது.
அரசு விவகாரங்களில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் தலையிடக் கூடாது என தவெகவினருக்கு கட்சி பொதுச் செயலர் என். ஆனந்த் அறிவுறுத்தல்
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக நாளை(மே 23) தில்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
விசிக எம்எல்ஏ வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
வன்னி அரசுக்கு சமூக நீதித் துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜோசப் சி. விஜய்யின் ஆலோகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளும், விரைவான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
தமிழக காவல்துறை வரலாற்றில் தடம் பதித்த முதல் பெண் காவலரான சிசிலி (82), உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை (மே 21) காலமானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.























