திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இபிஎஸ்தான் எங்கள் பொதுச் செயலர்: எஸ்.பி. வேலுமணி பேட்டி! சி.வி. சண்முகம் எங்கே?

இபிஎஸ்தான் எங்கள் பொதுச் செயலர் என்று எஸ்.பி. வேலுமணி கூறியிருக்கிறார்.

News image

எஸ்.பி. வேலுமணி - file photo

Updated On :22 மே 2026, 1:12 pm IST

எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் பொதுச் செயலர், எங்களைப் பற்றி தவறாக எழுதி பெரும் குழப்பத்தை சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று அதிமுகவில் உருவான மற்றொரு அணியைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று மிக முக்கிய நிகழ்வாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இந்த செய்தியாளர் சந்திப்பு அமைந்துள்ளது.

அதிமுகவில் இபிஎஸ், சிவிஎஸ் என இரண்டு அணியாகப் பிரிந்த நிலையில், பல தகவல்களை சி.வி. சண்முகம்தான் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்து வந்தார். அவர் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசி வந்ததோடு, உள்கட்சி விவரங்களை சற்றும் யோசிக்காமல், பின் விளைவுகளை அறியாமல் வெளிப்படுத்தி வந்தார்.

இதற்கிடையே, சிவிஎஸ் தரப்பு, தவெக அமைச்சரவையில் இடம்பெறுமா என்ற கேள்விகள்கூட எழுந்தன. ஆனால் இன்று தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்து, அதிமுகவுக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்திருக்கின்றன.

இதனிடையே, செய்தியாளர்களை இன்று சி.வி. சண்முகம் இல்லாமல் சந்தித்த எஸ்.பி. வேலுமணி தரப்பினர், குரலை மிகவும் தாழ்த்திப் பேசியிருக்கிறார்கள்.

அதிமுகவில் எந்தவித பிளிவும் இல்லை. சிறிய கருத்து வேறுபாடுதான். மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

கட்சியைப் பிரிப்பதற்காக செயல்படவில்லை. எங்களைப் பற்றி தவறாக எழுதி பெரும் குழப்பத்தை சிலர் விளைவிக்கின்றனர். முதல்வர் ஜோசப் விஜய் எங்களை சந்தித்தபோது சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அப்போதும் அமைச்சரவையில் இடம்பெறுவோம் என்று கூறவில்லை என பேசியிருப்பதன் மூலம், கடுமையான எதிர்ப்பை எதிரணியினர் குறைத்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான விமர்சனங்களைக் குறைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் ஒரு சலசலப்பு ஏற்பட்டு, தற்போது ஓரளவுக்கு அது ஓய்ந்திருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்திக்காமல், எஸ்.பி. வேலுமணி இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேச்சுகள் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக மாறியிருக்கிறது.

Summary

EPS is our General Secretary: S.P. Velumani Interview! Where is C.V. Shanmugam?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.