தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசா

முடத்தெங்குக்கு அரசியலில் என்ன பெயர் சூட்டலாம் என விசிகவை சூசகமாக உரைத்துள்ளார் ஆ. ராசா.

News image

திமுக எம்.பி. ஆ. ராசா - file photo

Updated On :22 மே 2026, 11:33 am IST

சென்னை: தவெக அமைச்சரவையில், விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றிருப்பதை மறைமுகமாக விமர்சித்துள்ளார் ஆ. ராசா.

திமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் நிலையில், திமுக எம்.பி. ஆ. ராசா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்,

என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?

வாழ்க தமிழ்! என்று பதிவிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிகள், தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருந்த நிலையில், அமைச்சரவையில் பங்கேற்குமாறு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகளும் ஐயுஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் இடம்பெறுவது என முடிவெடுத்து நேற்று அறிவித்தன.

இன்று தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னி அரசு, முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகானும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனை திமுக எம்.பி. ஆ. ராசா கடுமையாகக் கண்டித்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கடுமையாக விமர்சித்து, முன் ஏற தரப்பட்ட ஏணியும் என்று இன்று காலை அவர் போட்டி எக்ஸ் பதிவை அவரே சற்று நேரத்தில் நீக்கிவிட்டார்.

பிறகு அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

Summary

A. Raja has hinted at the VKC about what name to give to a cripple in politics.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.