திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கல்குவாரிகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அமைச்சா் டிகே. பிரபு உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு உத்தரவிட்டுள்ளார்.

News image

அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு.

Updated On :22 மே 2026, 7:26 pm IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதும் கனிமவளத் துறை சார்பில் 2000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் அரசு அனுமதி அளித்த அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

அதே போல, மத்திய அரசின் சியா (SEIAA) கமிட்டி, கல்குவாரிகளில் எந்த அளவு கற்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் பல இடங்களில் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் கல்குவாரிகளை கண்காணிக்கும் சேப்டி மைண்ஸ் எனப்படும் கண்காணிப்பு குழுவினர் முறையாக கல்குவாரிகளை கண்காணிக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து கல்குவாரிகளை அந்தந்த மாவட்ட கனிமவளத் துறையினர் ஆய்வு செய்து, கல்குவாரிகளில் அரசிடம் பெறப்பட்ட அனுமதி ஆணைப்படி கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா என்பதனையும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா என்பதனையும், உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், அரசு அனுமதியின்றி பல இடங்களில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளதை தொடர்ந்து அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்து, கல்குவாரிகள் விதிகளுக்குட்பட்டு செயல்படுகின்றனவா என்பது குறித்தும், சட்டவிரோதமாக இயங்குகின்றனவா என்பது குறித்தும், பல்வேறு விவரங்களை உடனடியாக திரட்ட கனிமவளத் துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வின் அடிப்படையில், அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டியெடுத்த கல்குவாரிகளை உடனடியாக மூடவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக அபராதம் வசூலிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Summary

Natural Resources Minister Dr. T.K. Prabhu has ordered inspections at stone quarries across Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.