தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிரதமர் மோடி தலைமையில் 4.5 மணிநேர ஆலோசனைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம்

News image

மத்திய அமைச்சரவைக் கூட்டம் - X | PM Modi

Updated On :22 மே 2026, 8:51 am IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளும், விரைவான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

பிரதமர் மோடியின் 5 நாள் அரசுமுறைப் பயணம் முடிவடைந்து, இந்தியா வந்தடைந்த நிலையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டம், சுமார் நான்கரை மணிநேரம் நீடித்தது. இந்தாண்டின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம் இதுதான் என்று கூறப்படுகிறது.

தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, எரிபொருள் தட்டுப்பாடு, நிர்வாகத் திறன் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேற்கு ஆசிய பதற்றம் மற்றும் அதன் பொருளாதாரத் தாக்கத்தால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

மேலும், விக்‌ஷித் பாரத் 2047 (வளர்ச்சியடைந்த இந்தியா) இலக்கை ஒரு முழக்கமாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், ஒரு உறுதிமொழியாகக் கருதி முன்செல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, எரிசக்தி, விவசாயம், உரங்கள், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் போன்ற துறைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எளிதான வாழ்க்கை, வணிகம் செய்வதை எளிதாக்குவது தொடர்பான விவாதங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

Summary

PM Modi on meeting with Council of Ministers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.