திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம்!

தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் கு.ப. கிருஷ்ணன்... - Instagram/Ku.pa. krishnan

Updated On :22 மே 2026, 7:29 pm IST

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தவெக நிர்வாகி கு.ப. கிருஷ்ணனை நியமனம் செய்து முதல்வர் ஜோசப் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதுபற்றி, வெள்ளிக்கிழமை (மே 22) வெளியான அரசாணையில் கூறப்பட்டிருந்தாவது:

“ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களில் மறுகுடியமர்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பலவேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.ப. கிருஷ்ணனை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்ட கு.ப. கிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் லீமாரோஸிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

KU.PA. Krishnan has been appointed as the Chairman of the Tamil Nadu Urban Development Board.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.