/

இந்தியாவின் வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி வேலை

முன்னணி பயிர் காப்பீட்டு நிறுவனமான இந்தியாவின் வேளாண் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 50 நிர்வாக அதிகாரிகள்

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:43 pm

ஆர். வெங்கடேசன்

முன்னணி பயிர் காப்பீட்டு நிறுவனமான இந்தியாவின் வேளாண் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 50 நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 10க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Officers

காலியிடங்கள்: 50

வயதுவரம்பு: 01.09.2017 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.32,795

தகுதி: விவசாயம் சார்ந்த துறைகளில் 60 சதவூத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., அல்லது பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.650. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:  www.aicofindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  
http://www.aicofindia.com/AICEng/General_Documents/Notices%20And%20Tenders/Recruitment_ad_with_clauses.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.