திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்

காங்கிரஸுடன் கூட்டணிக்கு தவெக தயாராக இருப்பதாக கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

News image

தவெக தலைவர் விஜய்

Updated On :25 பிப்ரவரி 2026, 7:01 am

காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராக இருக்கிறது என்று தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

கடந்த திங்கள்கிழமை சென்னைக்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

அப்போது தவெக குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

”தவெக எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது. கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதாவது அவர்கள் எங்கள் பலத்தை அங்கீகரித்துள்ளனர்.

அரசியலில் எல்லோரிடமும் பேச வேண்டும். ஒருபோதும் தொடர்பு இல்லாமல் இருக்காது. கடுமையான எதிரிகள்கூட தொடர்பு கொள்கிறார்கள். அதிமுக தலைவர்களை சந்திக்கும்போதுகூட ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்வோம்” எனத் தெரிவித்தார்.

Summary

TVK is ready for alliance with Congress! Congress leader Girish Chodankar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.