தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் காந்தி தமிழ்நாடு வருவார் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்தேர்தல் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை தமிழ்நாடு வராத மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி பல்வேறு விமர்சனத்துக்குள்ளானார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி விரைவில் தமிழ்நாடு வரவுள்ளதாக தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தமிழகத் தேர்தலுக்காகப் பிரசாரம் செய்ய வருவார். எங்கள் கட்சியின் தலைவர்கள் அனைவரும் தமிழ்நாடு வருவார்கள்.
பிரசாரம் தீவிரமடையும் போது எங்கள் தலைவர்கள் பிரசாரத்தைத் தொடங்குவார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு உதவும் வகையில் 234 தொகுதிகளிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராகுல் காந்தி வருகிறார். பிரியங்கா காந்தி வருகிறார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும் வருகிறார்கள். தெலங்கானா, கர்நாடகத்தில் இருந்து முதல்வர்கள், துணை முதல்வர்கள் வரவிருக்கின்றனர். அவர்கள் வருவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.
Summary
Tamil Nadu & Puducherry Congress In-Charge Girish Chodankar says, “Rahul Gandhi will come and campaign for Tamil Nadu elections, all our leaders will come
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்

தேர்தல் பிரசாரம்! தமிழ்நாட்டை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா? அல்லது புறக்கணிக்கிறாரா?
தமிழகத்தின் கூட்டணி ஃபார்முலா புதுவைக்கும் பொருந்தும்! கிரிஷ் சோடங்கர் சிறப்புப் பேட்டி!!
கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


