அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாகத் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை அவர்கள் பெறவில்லை.
இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் பெரும் போராட்டத்திற்குப் பின் தவெகவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவைத் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து தவெகவுக்கு(107), காங்கிரஸ்(5), இந்திய கம்யூனிஸ்ட்(2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(2) என மொத்தம் 120 எம்எல்ஏக்கள் ஆதரளித்துள்ளனர்.
தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை எண்ணிக்கை கிடைத்ததால் ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை இன்று ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.
பின்னர், தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கவும், தவெக சார்பில் ஆட்சியமைக்கவும் அழைப்பு விடுத்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை விஜய்யிடம் வழங்கிய ஆளுநர் மே 13 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார்.
விஜய்யின் பதவியேற்பு விழா மே 10 அன்று காலை 10 மணியளவில் நேரு அரங்கில் நடைபெறுகின்றது. இதில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், விஜய்க்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகியுள்ளது.
ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்துக்கான முன்னோட்ட விடியோ காட்சியை ஏஐ மூலம் மாற்றி ஏஐ மூலம் தவெக தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடந்து வருவதைப் போன்ற விடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ’தமிழக முதல்வர் விஜய்யுடன் வருங்கால பிரதமர் ராகுல் காந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Summary
Girish Chodankar's Post Goes Viral!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








