லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என அறிவிப்பு...

News image

ஆர்.நல்லகண்ணு

Updated On :25 பிப்ரவரி 2026, 9:58 am

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நல்லகண்ணு இன்று பகல் 1.55 மணிக்கு காலமானார்.

அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் உடல், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

நாளை (பிப்.26) மாலை 4 மணி வரை அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அவரது விருப்பப்படியே உடல் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், நல்லகண்ணுவின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் முழு மரியதை அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ”தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.