மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தீ பரவட்டும், நாடாளுமன்றம் வரையில்... முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி

News image

முதல்வர் ஸ்டாலின் - விடியோ க்ளிப்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:53 am

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விடியோ வெளியிட்டு, நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் விடியோவில் பேசியிருப்பதாவது, தொகுதி மறுவரையறை என்ற கறுப்புச் சட்டத்துக்கு எதிரான நமது போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆபத்தை ஓராண்டுக்கு முன்னரே கண்டறிந்து, இந்த வெற்றியைப் பெறுவதற்கான எல்லா படிகளையும் அப்போதே நாம் தொடங்கினோம்.

மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் தொடங்கி, நேற்று முன்தினம் கறுப்புக் கொடி ஏற்றி, கறுப்புச் சட்ட நகலை கொளுத்தினேன். அதுவே, திண்டுக்கலில் நேற்று வெற்றிக்கான வெடியைக் கொளுத்தினேன்.

தீ பரவட்டும் என்று சொன்னேன். அது நாடாளுமன்றம் வரையில் பற்றிக் கொண்டது. 50, 60-களில் பார்த்த பழைய திமுகவை பார்க்க வேண்டிவரும் என்று எச்சரித்தேன்.

அப்படியென்றால் என்ன? என்று கேட்ட சில அரைவேக்காடுகளுக்கு - இதுதான் திமுக என்று வலிமையாகக் காட்டியுள்ளோம்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் முழுக்க முழுக்க பாஜகவுக்கு சாதகமாகக் கொண்டுவரப்பட்ட கறுப்புச் சட்டத்தை, நாடாளுமன்றத்தில் தோற்கடித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

குறிப்பாக, என்னுடன் நின்ற தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற போர்வையில், இந்தச் சட்டத்தைக் கொண்டுவர பாஜகவினர் முயன்றனர். ஆனால், இந்த ஏமாற்றுத் திட்டத்தை முன்னிருந்து தோற்கடித்ததே பெண்கள்தான்.

இந்திய கூட்டணிக் கட்சிகளில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் ஒன்றிணைந்ததால் இது சாத்தியமாயிற்று.

வடக்கு - தெற்கு என நமக்குள் பிளவை ஏற்படுத்தி, சண்டை மூட்டிவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு சரியான சம்மட்டி அடி.

12 ஆண்டுகளில் முதன்முறையாக, பிரதமர் மோடி அரசு கொண்டுவந்துள்ள அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, தோல்வியடைந்துள்ளது.

இது தொடக்கம்தான். இனி பாஜக நாடுமுழுக்க பெறவிருக்கும் தோல்விகளின் தொடக்கம்தான் இது.

பெண்கள் இடஒதுக்கீட்டுக்கும் இந்த மசோதாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, இது ஒரு தேசவிரோத சட்டம், இது அனுமதிக்க மாட்டோம், இதனை எல்லோரும் சேர்ந்து தோற்கடிப்போம் என நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தெளிவான உணர்வுகளை வெளிப்படுத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் அன்பு சகோதரருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நன்றிகள்.

திரிணமூல் காங்கிரஸ் மமதா பானர்ஜி, உத்தர பிரதேசத்தின் ஒளிவிளக்கு அகிலேஷ், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி, தேசியவாத காங்கிரஸின் செயல்தலைவர் சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, பிஆர்எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கும் நன்றிகள்.

தொடக்கலிருந்தே இந்த முயற்சியில் என்னுடைய கரங்களை வலுப்படுத்திய, நமது திராவிட உடன்பிறப்புகளான பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி, சித்தராமையா, டி.கே. சிவகுமார் ஆகியோருக்கும், தமிழ்நாட்டில் இருக்கும் நமது கொள்கைத் தோழமைகளான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

இப்போது நாம் பெற்றிருப்பது பாதி வெற்றிதான். 2001-ல் செய்த மாதிரியே, இப்போதும் அடுத்த 28 ஆண்டுகளுக்கு, 2051 வரையில் தொகுதி எண்ணிக்கையை மறுவரையறைச் செய்வதைத் தள்ளிவைக்க, அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

அதுமட்டுமின்றி, பெண்கள் இடஒதுக்கீட்டுக்காக, 2023-லேயே நாம் ஆதரித்து, நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, எந்த நிபந்தனையுமின்றி, பாஜக அரசு உடனடியாக இப்போதிருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அமல்படுத்த வேண்டும். அதுதான் முழு வெற்றியாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Summary

Chief Minister M.K. Stalin expresses gratitude for the defeat of the Constituency Delimitation Bill.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.